Load Image
Advertisement

பல்திறன்களை வளர்த்தால் வேலை நிச்சயம்

 If you develop multi-skills, you will get a job    பல்திறன்களை வளர்த்தால் வேலை நிச்சயம்
ADVERTISEMENT
கோவை;கோவைப்புதுார், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியின், 34வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடத்தியது.புதுடெல்லியின் புவி அறிவியல் அமைச்சகத்தின், வானிலை முன் அறிவிப்பு தேசிய மையத்தின், உயர் செயல்திறன் கணினிதுறையின் தலைவர் மற்றும் மூத்த விஞ்ஞானி பாலகிருஷ்ணன் அதியமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அவர் பேசுகையில், '' சர்வதேச போட்டிக்கு நிகராக, தொழில் நிறுவனங்கள் இன்றைய இளைஞர்களிடம் பல்வேறு திறமைகளை எதிர்பார்க்கின்றன. மாணவர்கள் பல்திறன்களை வளர்த்துக்கொள்வதுடன், புதிய விஷயங்களை தொடர்ந்து கற்றுக்கொண்டால் வேலைவாய்ப்பு நிச்சயம். சொந்த முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி, தங்கள் படிப்பினை நாட்டின் வளர்ச்சிக்கும், அடித்தட்டு மக்களுக்கும் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்'' என்றார்.

விழாவில், 918 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, அறங்காவலர் ஆதித்யா, முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், கல்லுாரியின் முதல்வர் சுமித்ரா மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement