ADVERTISEMENT
ஷெனாய் நகர், அண்ணா நகர் மண்டலம், 102வது வார்டில், ஷெனாய் நகர் - டி.பி.,சத்திரம் இடையேயான பகுதியில், புனித ஜார்ஜ் கான்வென்ட் தெரு உள்ளது.
இங்கு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்தன.
பணியின் போது அப்புறப்படுத்தப்பட்ட மணல் கழிவுகள், சாலையோரங்களில் கொட்டி வைக்கப்பட்டு இருந்தன. இப்பணிகள் முடிந்து இரண்டு மாதங்களாகியும், மணல் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன.இதனால், அப்பகுதியில் குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு நிலவியது.
மணல் கழிவுகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று காலை, சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பை மற்றும் வடிகால் மண் கழிவுகளை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதனால், அப்பகுதி வாசிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!