Load Image
Advertisement

சங்கர நேத்ராலயா நிறுவனர் டாக்டர் பத்ரிநாத் காலமானார்

 Sankara Nethralaya founder Dr Badrinath passed away    சங்கர நேத்ராலயா நிறுவனர் டாக்டர் பத்ரிநாத் காலமானார்
ADVERTISEMENT
சென்னை:சங்கர நேத்ராலயா மருத்துவ குழுமத்தின் நிறுவனரும், பிரபல கண் மருத்துவ நிபுணருமான டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், 83, சென்னையில் நேற்று காலமானார்.

செங்கமேடு சீனிவாச பத்ரிநாத் என்ற டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், 1940ல் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார். 1962ல் சென்னை மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பை, தங்க பதக்கத்துடன் நிறைவு செய்தார்.

நண்பர்களின் வழிகாட்டுதலுடன், அமெரிக்காவில் கண் மருத்துவம் பயிலச் சென்றார்; அங்கு பல்வேறு பட்டடங்கள் பெற்றார்.

டாக்டர் பத்ரிநாத், விழித்திரை மருத்துவத்தின் தந்தை என போற்றப்படும், டாக்டர் சார்லஸ் எல்.ஷீப்பென்ஸின் கீழ், கண் மற்றும் காது மருத்துவமனையில், விழித்திரை மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார்.

அமெரிக்காவில் பணியாற்றக்கூடிய வாய்ப்பு வந்த போது, அதை தவிர்த்து, இந்தியாவுக்கு வந்து மருத்துவ சேவையாற்றினார்.

லாப நோக்கமற்ற மருத்துவ சேவையை வழங்க, மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையை துவக்கினார். அதிலிருந்து, 1978ல் சங்கர நேத்ராலயா கண் மருத்துவ குழுமத்தையும் உருவாக்கினார்.

அதன்கீழ், ஏழை மக்களுக்கு முழுமையான இலவச கண் மருத்துவம், அறுவை சிகிச்சைகளை டாக்டர் பத்ரிநாத் வழங்கினார். மற்றவர்களுக்கு சர்வதேச தரத்தில், குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கப்பட்டது.

இவரது மருத்துவ சேவையை பாராட்டும் வகையில், 'பத்மஸ்ரீ, பத்மபூஷண், பி.சி.ராய்' உள்ளிட்ட பல்வேறு விருதுகளை, மத்திய, மாநில அரசுகள் வழங்கி கவுரவித்துள்ளன.

சென்னை, மந்தைவெளியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த பத்ரிநாத்துக்கு, டாக்டர் வசந்தி பத்ரிநாத் என்ற மனைவியும், சேஷு, ஆனந்த் என்ற இரு மகன்களும் உள்ளனர். பத்ரிநாத் இறுதி சடங்குகள், பெசன்ட் நகர் மின் மயானத்தில் நேற்று பிற்பகலில் நடந்தன.

டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுக்கு கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement