தினமலர்- பட்டம் மெகா வினாடி - வினா போட்டி: உடனுக்குடன் பதில் சொல்லி மாணவர்கள் அசத்தல்
கோவை:'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், நேற்று நடந்த 'பதில் சொல் அமெரிக்கா செல்' என்ற மெகா வினாடி வினா போட்டியில் மாணவர்கள், கடின கேள்விகளுக்கும், உடனுக்குடன் பதில் சொல்லி அசத்தினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பள்ளி மாணவர்கள், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான 'நாசா'விற்கு, நேரில் செல்லும் வாய்ப்பை வழங்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி-வினா போட்டி கடந்த, 2018 முதல் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போட்டி, இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 150 பள்ளிகளில் நடக்கிறது. இப்போட்டிகளை, கோ-லோ நிறுவனம் மற்றும் சத்யா ஏஜென்சி இணைந்து வழங்குகிறது.
சின்னவேடம்பட்டி, டி.கே.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்த, தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், 60 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்வு செய்யப்பட்ட, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். காலிறுதி சுற்றுக்கான வினாடி-வினா போட்டி, மூன்று பிரிவுகளாக நடந்தது. இதில், 'ஏ' அணியை சேர்ந்த, பிளஸ் 1 மாணவர்கள் முறையே ஹருண், நிகிலேஷ் ஆகியோர், அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் தேவி, ஆசிரியைகள் முறையே புவனேஸ்வரி, ராஜலட்சுமி ஆகியோர் சான்றிதழ் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!