குட்கா சோதனை எதிரொலி 26 போலீசார் மீது நடவடிக்கை
ஆவடி, செவ்வாய்பேட்டை, வெள்ளவேடு, பூந்தமல்லி, செங்குன்றம், எண்ணுார், மணலி, போரூர், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில், 146 கடைகளில் நடந்த சோதனையில், 23 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து 113.8 கிலோ குட்கா, 'கூலிப்' உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 1.07 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த 23 கடைகளை பூட்டி விற்பனையை நிறுத்த, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த திடீர் சோதனையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். குட்கா சோதனை எதிரொலியாக இரண்டு உதவி ஆய்வாளர்கள், 24 போலீசாரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி, ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!