ADVERTISEMENT
ராயபுரம், சென்னை, ராயபுரம், கல்மண்டபம், ஜி.ஏ.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தனியார் பள்ளிகள் உள்ளன. நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்களை ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது அதே பகுதியில் இருந்த ஒரு வெறி நாய், திடீரென சரமாரியாக கடிக்கத் துவங்கியது. தொடர்ந்து கடித்ததில், 13 ஆண்கள், 15 பெண்கள் உட்பட 28 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த 28 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி கூறியதாவது:வெறிநாய் கடித்ததாக 28 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஒரே நாய் அனைவரையும் கடித்துள்ளது. பாதிக்கப்பட்ட 28 பேருக்கும், முதல் கட்டமாக நாய்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து ரேபிஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதில், 26 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். வெறி நாய் கடியால் தீவிரமாக பாதிக்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.வெறிநாய் தொடர்ந்து மாணவர்களையும், பெற்றோர்களையும் கடித்ததால், அப்பகுதியினர் நாயை அடித்துக் கொன்றனர்.இதுகுறித்து ராயபுரம் மண்டல கால்நடை மருத்துவர் ஜானகிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் நாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!