ADVERTISEMENT
கோவை:எட்டிமடை, வெங்கடேஷ்வரா கணினி பயன்பாடு மற்றும் மேலாண்மை கல்லுாரியில், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ.,துறைகள் இணைந்து, 'வான்கொஸ்ட் - 2023' என்ற தலைப்பில், மாநிலங்களிடையேயான வினாடி - வினா போட்டியை நடத்தியது.
தென் மாநிலங்களிலிருந்து, பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
ஐதராபாத்தை சேர்ந்த டேக்கன் குவிஸ் மாஸ்டர் விஷ்ணு, வினாடி -- வினா போட்டியை நடத்தினார்.
பல்வேறு கட்டங்களுக்கு பிறகு இறுதி சுற்றில், பெங்களூரு ஜெயின் பல்கலையை சேர்ந்த அஸ்வின், பவன் கல்யாண் ஆகியோர் முதல் பரிசாக, ஒரு லட்சம் ரூபாயை வென்றனர்.
இரண்டாவது பரிசாக, 50 ஆயிரம் ரூபாயை, ஐதராபாத் ஆஸ்மோனியா மருத்துவ கல்லுாரியை சேர்ந்த சையது அகமது, சேக் ரபீ அணி வென்றது.
கல்லுாரியின் தலைவர் வேலு மற்றும் செயலாளர் மேகலா, கல்லூரி முதல்வர் சைனி மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!