நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு
சென்னை:பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில், நடிகை த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய, நடிகர் மன்சூர் அலிகான் மீது, சென்னை போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை சூளைமேடு பகுதியில் வசிப்பவர் மன்சூர் அலிகான். இவர், சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, லியோ படத்தில் நடித்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
பதில் அளித்த மன்சூர் அலிகான், 'கற்பழிப்பு காட்சி இல்லையே' என, வருத்தப்படுவது போல, நடிகை த்ரிஷா பற்றி ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசினார். இதற்கு, திரிஷா கடும் கண்டனம் தெரிவித்தார்.
மன்சூர் அலிகானுக்கு சினிமா உலகத்தினர் மற்றும் அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மன்சூர் அலிகான் அசருவதாக இல்லை. மன்னிப்பு கேட்க முடியாது என, அடம் பிடித்து வருகிறார்.
இதற்கிடையில், 'பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் திரிஷா குறித்து பேசிய மன்சூர் அலிகான் மீது, சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு, தேசிய மகளிர் கமிஷன் பரிந்துரைத்தது.
இதையடுத்து, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார், மன்சூர் அலிகான் மீது, பெண்ணுக்கு பாலியல் தொல்லை, அநாகரிகமாக இழிவுப்படுத்தி பேசுதல் என, இரு பிரிவுகளில் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!