சிறுமி தற்கொலை
வியாசர்பாடி, வியாசர்பாடி, ஜெ.ஜெ.ஆர்.நகரைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி, 18. இவருக்கு, 16 வயதில் தங்கையும்; 15 என்ற தம்பியும் இருந்தனர். இவரது தந்தை மோகன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தாய் சசி, புதுச்சேரியில் கூலி வேலை செய்து வருகிறார்.
லோகேஸ்வரி, சரஸ்வதி, அருண் ஆகிய மூவரும், பாட்டியின் பராமரிப்பில் வியாசர்பாடியில் வளர்ந்து வருகின்றனர்.
பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளியில் 16 வயது சிறுமி பிளஸ் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், படுக்கையறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிர்ச்சியடைந்த லோகேஸ்வரி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சரஸ்வதியை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிய வந்தது. எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!