Load Image
Advertisement

துாய்மையாக இருந்தால் நோய் தொற்று ஏற்படாது ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் பேச்சு

 Nagarajan, founder of Ramraj Cotton, said, If it is clean, there will be no infection    துாய்மையாக இருந்தால் நோய் தொற்று ஏற்படாது ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் பேச்சு
ADVERTISEMENT
கோவை:''துாய்மையாக இருந்தால் நோய் தொற்று ஏற்படாது,'' என, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் பேசினார்.

இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சொசைட்டி(ஐ.எஸ்.சி.சி.எம்.,) கோவை கிளை சார்பில், ஐ.எஸ்.சி.சி.எம்., தினக் கொண்டாட்டம் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.செப்சிஸில் இருந்து தடுத்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் வெற்றி பெறுதல் எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.

ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் பேசுகையில்,''துாய்மையாக இருந்தால், நோய் தொற்று ஏற்படாது. துாய்மை என்பது வெண்மை. கடமையை செய்பவர்கள், கடவுளை வணங்குவர்.

ஆனால், கடமையை செய்யும் டாக்டர்கள் கடவுளாக பார்க்கப்படுகின்றனர்,'' என்றார்.பி.எஸ்.ஜி., உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில், பாரதீய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் உரை அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்ச்சியில், அமைப்பின் தலைவர் சிவகுமார், செயலாளர் சத்தியமூர்த்தி, டாக்டர் கோபிநாத், டாக்டர் விவேகானந்தன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement