Load Image
Advertisement

எந்தெந்த திட்டங்களுக்கு யு.ஜி.சி., நிதி? தமிழக அரசு பதில் அளிக்க அவகாசம்!

சென்னை:சென்னை பல்கலையின் ஆராய்ச்சி திட்டங்களில் எவற்றுக்கு, பல்கலை மானிய குழுவின் நிதி பெறப்படுகிறது என்பதற்கு விளக்கம் அளிக்க, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி.ஜெகநாத் என்பவர் தாக்கல் செய்த மனு:

உயர் கல்வித் துறை, கடந்த செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவில், சென்னை பல்கலை துணை வேந்தர் தேர்வுக்கான தேடுதல் குழு உறுப்பினர்களை அறிவித்தது. வேந்தரின் பிரதிநிதியாக பேராசிரியர் பட்டு சத்யநாராயணா, சிண்டிகேட் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தீனபந்து, செனட் பிரதிநிதியாக டாக்டர் பி.ஜெகதீசன் ஆகியோர் தேடுதல் குழுவில் உள்ளனர்.

இதில், யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழுவின் பிரதிநிதி இடம் பெறவில்லை.

யு.ஜி.சி.,யின் பிரதிநிதி இல்லாமல், தன்னிச்சையாக தேடுதல் குழுவை, மாநில அரசு நியமித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் இது உள்ளது. எனவே, உயர் கல்வித்துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், ''பல்கலை வேந்தராக முதல்வரை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. எந்தெந்த திட்டங்களுக்கு, யு.ஜி.சி., நிதி உதவி பெறப்படுகிறது என்பது குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, 'துணை வேந்தர் தேடுதல் குழுவில், யு.ஜி.சி., பிரதிநிதியை சேர்ப்பது தொடர்பாக, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது; வேந்தர் பதவி பற்றி, நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை' என்ற முதல் பெஞ்ச், அரசு அறிக்கை அளிக்க அவகாசம் வழங்கி, விசாரணையை டிசம்பர் 18க்கு தள்ளி வைத்தது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement