Load Image
Advertisement

சிவகுமாருடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு ஏன்?

 Why did Karthi Chidambaram meet Sivakumar?    சிவகுமாருடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு ஏன்?
ADVERTISEMENT
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற முயற்சித்து வரும், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம், பெங்களூரில் கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான், ம.பி., உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின், டிசம்பர் முதல் வாரத்திற்குள், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மாற்றப்படுவார் என்றும், தனக்கு அந்த பதவி கிடைக்கும் என்றும், ஆதரவாளர்களிடம் கார்த்தி கூறி வருகிறார்.

சமீபத்தில் தன் பிறந்த நாளை சிவகங்கையில் கொண்டாடிய கார்த்தி, 'தலைவர் பதவியை பெற விரும்புகிறேன்' என, வெளிப்படையாக தெரிவித்தார். அதற்கு ஆதரவு திரட்டும் வகையில், பெங்களூரில் நேற்று முன்தினம், கர்நாடக மாநில துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்து பேசியுள்ளார்.

இதற்கிடையில், வரும் 24ம் தேதி முதல் தெலுங்கானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பணியாற்ற, கார்த்தி சிதம்பரம் திட்டமிட்டுள்ளார்.


- நமது நிருபர் -


வாசகர் கருத்து (14)

  • HARIPRASATH G - chidambaram,இந்தியா

    காவிரியில் தண்ணீர் திறந்து விட பேச்சுவார்த்தை நடத்தி இருப்பாரோ?

  • duruvasar - indraprastham,இந்தியா

    உள் நாட்டில் இருவரும் அண்டை மாநிலகாரர்கள், பக்கத்து பக்கத்து காபி எஸ்டேட் ஓனர்கள், வெளிநாட்டில் பக்கத்து பக்கத்து தீவின் உரிமையாளர்கள் எனவே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தங்கள் பிஸ்னஸ், புதிய முதலீடுள் பற்றி விவாதித்திருப்பார்கள் என நம்பலாம்.

  • குமரி குருவி -

    இந்த சந்திப்பு தமிழக விவசாயிகள் நலன் கருதியா..?சுயநலனுக்கவா

  • R S BALA - CHENNAI,இந்தியா

    தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ் தலைவராக பொருத்தமான நபர் இவர் மட்டுமே. இவ்வளவு நாள் செய்த காலதாமதமே தவறானது.

  • duruvasar - indraprastham,இந்தியா

    ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சச்சின் பைலட்டை உருவாக்க திட்டம் தீட்டப்படுகிறது. கடந்த தேர்தலில் ஜோதி மணிக்கு நிதி உதவி அளித்தது போல் இம்முறை தனக்கும் உதவவேண்டும் என கேட்டிருக்கலாம். புலிக்கு பிறந்தது பூனையாகுமா ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்