விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கடந்த 19ம் தேதி, தொழிலதிபர் குவைத் ராஜா இல்ல திருமண விழா நடந்தது. அதில் மன்னார்குடி ஜீயர், திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
அங்கு ஜீயரை சந்தித்த திருமாவளவன், அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். பின்னர், இருவரும் அருகருகே இருக்கையில் அமர்ந்து, சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர். இந்த படங்கள், சமூக ஊடகங்களில் வெளியாகின. இந்த சந்திப்பை ஆதரித்தும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, மன்னார்குடி சம்பத்குமார ராமானுஜ ஜீயர் கூறியதாவது: திருமண விழாவில் தற்செயலாகத்தான் திருமாவளவனை சந்தித்தேன். மிகுந்த மரியாதை, அன்புடன் என்னிடம் பேசினார். பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பெற்றார். அவரது நல்ல நோக்கங்கள் நிறைவேற, நான் ஆசி வழங்கினேன்.
நான் இருக்கையில் அமர்ந்ததும், என் அருகில் அமரலாமா என கேட்டார். இது என்ன கேள்வி. தாராளமாக அமருங்கள் என்றேன். பின், இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்; பரஸ்பரம் நலம் விசாரித்தோம்.
துாத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலாங்குறிச்சி அருகே அகிலாண்டபுரத்தில் உள்ள, ஸ்ரீ செங்கமலம் ராஜகோபாலன் கோசாலைக்கு, ஜான்பாண்டியன் போன்றவர்கள் வருகை தந்துள்ளனர். தாங்களும் வர வேண்டும் என அழைப்பு விடுத்தேன். எங்கள் மடத்திற்கும் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். மகிழ்ச்சியுடன் வருவதாக உறுதி அளித்தார். மற்றபடி வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (36)
தமிழகத்தில் இருக்கும் இந்து சமய மடாதிபதிகள், குருமார்கள், சொற்பொழிவாளர்கள், திராவிட தலைவர்கள், பாஜக தலைவர்கள், மற்றும் சாதி வேறுபாட்டை ஒழிக்க முயலும் பலர், அறிவாளிகள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், மற்றும் பலர் தமிழகத்தின் நல்வாழ்வுக்காக, மக்களின் நல்ல எதிர்காலத்திற்காக ஒரு மாநாடு நடத்த வேண்டும். இந்த மாநாடு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாவது நடக்க வேண்டும். அதில் நமக்குள் என்ன பகைமை, என்னென்ன வேறுபாடுகள், எதனால் சில மரபுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டியிருக்கிறது, எவற்றையெல்லாம் இந்த காலத்திற்கேற்ற மாதிரி விட முடியும், சாதி பாகுபாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்க என்ன நடவடிக்கைகள் வேண்டும், எப்படி அனைவரும் ஒன்றுகூடி, தமிழர்களாக ஒன்றிணைந்து, கரம் கோத்து, அனைவருக்கும் சாதகமாக அமையும்படியாக, அனைவரும் விரும்பும்படியாக ஒரு எதிர்காலத்தை உருவாக்கலாம் என்று ஆலோசனை செய்து, ஒரு பத்து குறிக்கோள்களை பிரகடனம் செய்ய வேண்டும். அனைத்து தலைவர்களும், இந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவோம் என்று சபதம் எடுக்க வேண்டும். இதைப்பற்றி ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டும். தமிழால் இணைவோம், தமிழை வளர்ப்போம், ஆன்மீகத்தை சீர்திருத்துவோம் என்ற ஒரு சமூக புரட்சியை தொடங்கி, அதை பட்டிதொட்டிகளெல்லாம் சென்று மக்களுக்கு விளக்கி, அவர்களை அதில் பங்குபெற செய்து, ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அனைவரையும் பங்குபெற செய்து, அரவணைத்து, ஊக்கம் கொடுத்து, அன்பை வளர்த்து சாதிக்க வேண்டிய முயற்சியாக இது இருக்க வேண்டும். பிரச்சனைகளை நாமே பேசி தீர்க்க வேண்டும். வெறுப்பை வளர்த்தால் வெறுப்பு மேலும் வளரும். நெருப்பை எப்படி நெருப்பை வைத்து அணைக்க முடியாதோ, அதைப்போலவே வெறுப்பை வைத்து எதையும் சாதிக்க முடியாது. தமிழ் மக்கள் நமது மாநிலத்தின் நல்ல எதிர்காலத்திற்காக அகம்பாவத்தையும், ஆணவத்தையும் விட்டு, படியிறங்கி, ஒருவரை ஒருவர் மதித்து, வணங்கி, யாரையும் புண்படுத்தாமல், ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று பிரார்த்திப்போம். உலகத்துக்கே உதாரணமாக ஆவோம்.
திரு ராஜகோபால் அவர்களே, ஜாதியை, பாகுபாட்டை ராணுவ ஆட்சி வந்தால் மட்டுமே ஒழிக்க முடியும் , palliyileye அரசால் ஜாதி வேறுபாடு புகுத்தப்படுகிறது. ஒரே வகுப்பில் படுக்கும் ஒரு பணக்கார மாணவனுக்கு ஜாதியின் பெயர் அரசு மதம் தோறும் பணம் கொடுக்கிறது, அதே நேரம் yelai மாணவனுக்கு அவன் ஜாதியின் காரணமாக arasin uthavigal marukka படுகின்றன , பணக்கார மாணவன், ஜாதியின் காரணமாக குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் உயர் கல்வியில் இடம் கிடைக்கிறது இந்த வேறுபாடு, மாணவர்கள் மத்தியில் வெறி உன்னத ? ஐடா ஒதுக்கீட்டை ஒலித்தால் தான் ஜாதி வெரி ஒளியும். atharkku வோட் அரசியல் காரணமாக அரசியல் காட்சிகள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க மாட்டார்கள். இது தான் நிதர்சனம்.
ஜாதி வெறியை தூண்டிவிட்டு - குளிர்காயும் - இவர் போன்றவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டால் நாடு உருப்படும்
மக்களை ஏமாற்றி பிழைப்பவர்கள் அரசியல்வாதிகள் மட்டும் அல்ல பல ஆன்மீகவாதிகளும்தான்.
மேல போட்டுருக்கற படமே எதோ ஒட்டி வெட்டி போட்ட மாதிரி இருக்கே எந்த ஒரு ஜீயரும் இப்படி உட்கார வைத்து பேச மாட்டார்கள்
ஆனாலும் பாவம் திராவிடிய தாதாக்கள் முன் பிளாஸ்டிக் சேர்தான்...
எலக்சன் வருகிறதென்றால் அழகு குத்தி காவடி எடுக்கக்கூட தயங்காத ஆள், எலெக்சன் முடிந்தவுடன் அசிங்கமாய் சிலை இருந்தால் அது கோயில் என்று பாடம் எடுக்கும் ஜென்மம்