Load Image
Advertisement

தொழில்நுட்பங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள்  கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அறிவுரை 

 Use Technology Creatively Advice at College Graduation    தொழில்நுட்பங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள்  கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் அறிவுரை 
ADVERTISEMENT
கோவை;பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியின், 36வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரல் கலைச்செல்வி தலைமைவகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

இதில், அவர் பேசியதாவது:

இன்றைய இந்திய இளைஞர்களிடம் உலகளவில் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. 21ம் நுாற்றாண்டில், இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது.

நம் நாடு எட்ட முடியாத வளர்ச்சியை எட்டி தொடவுள்ள சூழலில்; அதற்கு நாம் தயாராக உள்ளோமோ என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எதிர்வரும், 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுள்ள தகுதிவாய்ந்த மனிதவளம் இருக்குமா என்பதை கூறமுடியாது; இதுவே நமக்கான சரியான தருணம்.

நிலையான வளர்ச்சியை அடைய, 24 ஆண்டுகள் நம் வசம் உள்ளன. இந்த 24 ஆண்டுகளில் செய்யமுடியவில்லை எனில் இனி எப்போதும் இயலாது என்பதை புரிந்து நாம் ஒவ்வொருவரும் ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உங்களுக்கு உதவ மட்டுமே உள்ளன. இயந்திர தொழில்நுட்பங்களை உங்களை அடிமைகளாக மாற்ற அனுமதிக்காதீர்கள். தொழில்நுட்பங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி முன்னேற்றங்களை அடையவேண்டும். தற்போதைய தொழில்நுட்ப உலகில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன; சரியாக பயன்படுத்தினால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

பட்டமளிப்பு விழாவில், முனைவர், இளநிலை, முதுநிலை பிரிவுகளின் 4,005 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். இதில், பி.எஸ்.ஜி., கல்விநிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் பிருந்தா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement