ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
கோவை;மாநகராட்சி மேற்கு மண்டலம், 39வது வார்டுக்கு உட்பட்ட கீர்த்தி நகர், அஜ்ஜனுார் பகுதியில் மாநில நிதி கழக திட்டத்தில், 630 மீட்டர் துாரத்துக்கு ரூ.41.61 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்தார்.தொடர்ந்து, 42வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகரில் அவர் ஆய்வு செய்தபோது, அங்குள்ள தார் சாலை முறையாக 'காம்பேக்ட்' செய்யப்படாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கமிஷனர் உத்தரவிட்டார்.
மண்டல தலைவர் தெய்வயானை, உதவி கமிஷனர் சந்தியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மண்டல தலைவர் தெய்வயானை, உதவி கமிஷனர் சந்தியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!