Load Image
Advertisement

கோவை வந்தது பேனா! அலங்கார ஊர்திக்கு வரவேற்பு

 Pen came to Coimbatore! Welcome to the decorative vehicle     கோவை வந்தது பேனா!  அலங்கார ஊர்திக்கு வரவேற்பு
ADVERTISEMENT
கோவை:தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழை இளைய தலைமுறையினர் அறியச் செய்ய பேனா ஊர்தி நேற்று கோவை வந்தது. நவ.11 ல் கன்னியாகுமரியில் இந்த வாகனம் புறப்பட்டது. 60 அடி நீளமுள்ள பேனா வாகனத்தில், கருணாநிதி எழுதிய புத்தகங்களின் முகப்பு பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. வாகனத்தின் உள்ளே கருணாநிதியின் சிலை இடம் பெற்றுள்ளது.

கன்னியாகுமரி, துாத்துக்குடி, நெல்லை, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களை கடந்து கோவை மாவட்டம் சூலுார் வந்தது.

அந்த வாகனத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கொடிசியா வளாகம் அருகில் நிறுத்தப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் கல்பனா, துணைமேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.,கார்த்திக் உள்ளிட்டோர் வாகனத்தை மலர் துாவி வரவேற்றனர்.

கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் வாகனம் பொள்ளாச்சி புறப்பட்டு சென்றது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement