Load Image
Advertisement

வேம்பம்பட்டு மேம்பாலம், சுரங்கப்பாதை பணி விரைந்து முடிக்க நடவடிக்கை: கலெக்டர் தகவல் ரயில் மோதி மூவர் பலி எதிரொலி

 Action taken to complete Vembampattu flyover, tunnel works: Collector informs train collision, three killed    வேம்பம்பட்டு மேம்பாலம், சுரங்கப்பாதை பணி விரைந்து முடிக்க நடவடிக்கை: கலெக்டர் தகவல் ரயில் மோதி மூவர் பலி எதிரொலி
ADVERTISEMENT
வேப்பம்பட்டு:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் ரயில்வே கடவுப் பாதை எண் 14ல் உள்ள வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் கடந்த 19ம் தேதி கடவுப்பாதையை கடக்க முயன்ற தந்தை இரு மகள்கள் என மூவர் ரயில்மோதி பலியாயினர்.

இதையடுத்து நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருவாய்த்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் கலெக்டரிடம் கடந்த 10 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பால பணிகள் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் குறித்து குற்றச்சாட்டுக்கள் வைத்தனர்.

பின் கலெக்டர் கூறியதாவது :

வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணிகள் முழுமையாக செய்வதற்கு நில எடுப்பு சம்பந்தமான அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில்வே நிர்வாகத்திற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மேம்பால பணிகள் மற்றும் ரயில் நிலையத்தில் பணிகள் முடிவடையும் வரை தண்டவாளத்தை கடக்கும் பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை செய்வதற்கு 24 மணி நேரமும் காவலர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

இதேபோல் மாவட்டத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் மனித உயிரிழப்பு மற்றும் கால்நடைகள் உயிரிழப்பகளை தடுக்கும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சுரங்கப்பாதை பணிகளுக்கு அதற்கான நில உரிமையாளரிடம் கலந்தாலோசித்து வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதத்திற்குள் மேம்பால பணிகளை முடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ரயில்வே, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பகுதிவாசிகளும் செயல்பட வேண்டும். கடவுப்பாதையை கடக்கும் போது பொதுமக்கள் விதிமுறைகளை பின்பற்றி ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர்கள் முனைவர்.செல்வநம்பி, கணேசன், ரயில்வே துறை கோட்டபொறியாளர் ஜம்ஷீர், உதவி கோட்ட பொறியாளர் சரவணன் பவன், திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ் குமார் உடனிருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement