300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
போத்தனூர்;கோவைபுதூர் அருகே நேற்று பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். 300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. அரிசி, வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம், கொழிஞ்சாம்பாறை, பழநியார்பாளையத்தை சேர்ந்த சபீர் அலி, 30 என தெரிந்தது. அவரை ேபாலீசார் கைது செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!