Load Image
Advertisement

எதிர்வரும் ஐந்து நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு 

கோவை:கோவையில் எதிர்வரும் ஐந்து நாட்களும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

அதன் படி, இன்று 70 மி.மீ., நாளை 50 மி.மீ., 24ம் தேதி 70 மி.மீ., 25ம் தேதி 40 மி.மீ., 26ம் தேதி 35 மி.மீ., மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளன. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். காலைநேர காற்றின் ஈரப்பதம், 100 சதவீதமாகவும், மாலை நேரம் 92 சதவீதமாகவும் இருக்கும். கனமழை எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து பயிர்களுக்கும் வடிகால் வசதி மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மானாவாரியில் கொண்டைகடலை விதைப்புக்கு இது சரியான தருணம் என்பதால், நவ., 25ம் தேதிக்குள் விதைப்பை முடிக்கவேண்டும். காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், திராட்சையில் அடிசாம்பல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்த அசாஸிஸ்ட்ரோபின் 25எஸ்சி., லிட்டருக்கு ஒரு மில்லி என்ற அளவில் தெளிக்கவும். கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாதவர்கள், கோமாரி நோய்க்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement