Load Image
Advertisement

போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிரம் காட்ட வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்

கோவை:வெளிமாநிலங்களில் இருந்து போதைப்பொருள் கடத்தலை தடுக்க தீவிரம் காட்ட வேண்டும் என, போலீசார் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தல் அதிகளவில் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க ஒருங்கிணைந்த திட்டங்களை தயார் செய்து, நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போதை பொருட்கள் தடுப்பு தொடர்பான ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில், அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து, ரயில், இதர வாகனங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில்,'கஞ்சா, போதை மாத்திரை, போதை ஸ்டாம்ப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து ஆலோசிக்கப்பட்டது. போதைப்பொருட்களை வாங்குவோர், அவற்றை பதுக்கி, கல்லூரி மாணவர்கள், ஐ.டி., இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்வது குறித்தும், இதை தடுக்க ஒருங்கிணைந்த சோதனை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கடத்தலில் ஈடுபடுவோர், அவர்கள் பின்னணியில் இருப்பவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு வினியோகிப்பவர்கள், விற்பனையாகும், இடங்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டு சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டது. மொத்த குழுவையும் கண்டறிந்து அனைவரையும் பிடிக்க உத்தரவிடப்பட்டது. இதற்காக தனிப்படைகள் ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement