கைவினை பொருட்கள் கண்காட்சி
கீழம்பி:காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல்கல்லுாரியில் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டத்தின்கீழ், மகளிர் குழுவினர் தயாரித்த கைவினைப் பொருட்கள், 'கல்லுாரி சந்தை' என்ற பெயரில், கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் மலர்க்கொடி விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் சுயஉதவிக் குழுவினர் வாயிலாக தயாரித்த பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!