மாவட்ட கலை திருவிழா போட்டி; நாளை துவக்கம்
கோவை:அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மட்டும் பிரத்யேகமாக, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நாளை துவங்குகின்றன.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கலைத்திருவிழா போட்டிகள் கடந்தாண்டு முதல் நடத்தப்படுகிறது. மாநில அளவிலான சுற்றில், போட்டிவாரியாக முதல்பரிசு பெறுவோர், வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த வாய்ப்பை, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களும் பெறும் வகையில், தற்போது போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவை வருவாய் மாவட்ட அளவிலான போட்டி, நாளை துவங்கி, 24ம் தேதி வரை நடக்கிறது.
இசை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ், 70 வகையான போட்டிகளில், மாணவர்கள் பங்கேற்கலாம். தனிநபர், குழு போட்டிகளும் இருப்பதால், முதல்பரிசு பெறுவோர், மாநில அளவிலான சுற்றில் பங்கேற்க தகுதிபெறுவர் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!