Load Image
Advertisement

தனியார் வாகனங்களால் சிறை மைதானம்: சிறை நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை

 Motorists demand permanent solution to prison ground prison by private vehicles    தனியார் வாகனங்களால் சிறை மைதானம்: சிறை நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADVERTISEMENT
கோவை:தீபாவளிக்கு தற்காலிக வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டிருந்த சிறை மைதானத்தில் தற்போது கண்காணிப்பு இல்லாததால் வருவாய் இழப்புடன், வாகனங்கள் ஆக்கிரமிக்கும் அவலமும் காணப்படுகிறது.

தீபாவளி பண்டிகை கடந்த 12ம் தேதி கொண்டாடப்பட்டது. முன்கூட்டியே புத்தாடைகள் வாங்குவதற்கு பெரிய கடை வீதி, காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வாகனங்களில் சென்றவர்கள் நினைத்த இடங்களில் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.

இதை தடுக்க காந்திபுரம், கிராஸ்கட் ரோடு பகுதிகளுக்கு 'ஷாப்பிங்' சென்றவர்களுக்கு சிறை மைதானத்தில் வாகனம் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு, மாநகராட்சி சார்பில் வாகனங்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதனால், சிறை மைதானத்தில் தினமும், 100க்கும் அதிகமான தனியார் பஸ்கள் இவ்வசதியை பயன்படுத்தின.

இதனால் நிறுத்த கட்டணம் ஜோராக வசூலாகியதுடன், காந்திபுரம் பகுதியில் பயணிகளை ஏற்ற பஸ்கள் வரிசை கட்டி நிற்பது தவிர்க்கப்பட்டது.

தற்போது, மாநகராட்சி பணியாளர்கள் கூடாரங்களை காலிசெய்துள்ள நிலையில் சிறை மைதானத்தை வாகனங்கள் இலவசமாக பயன்படுத்தி வருகின்றன. இது அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவருகிறது. மேலும், கண்காணிப்பு இல்லாததால் இரவு நேரங்களில் அசம்பாவிதங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது.

காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், தமிழ்நாடு ஓட்டல் எதிரே என பல்வேறு இடங்களில் வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் ரோடுகளில் தனியார் பஸ்கள் வரிசை கட்டி நின்று பயணிகளை ஏற்றுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க அரசு பொருட்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் இல்லாத சமயங்களில் இந்த மைதானத்தில் நிரந்தர வாகன நிறுத்தம் வசதியை ஏற்படுத்தலாம். அதேசமயம், கட்டணம் நிர்ணயித்து முறைப்படுத்தினால் வருவாயுடன், போக்குவரத்து நெரிசல், பண்டிகை காலங்களில் பயணிகள் அலைச்சலை தவிர்க்கலாம்.

மாநகர போலீசார், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆகியன இந்த விஷயத்தில் நல்ல முடிவை எடுத்தால், காந்திபுரம் பகுதியில் நெரிசல் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement