வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,398 ஓட்டுச்சாவடிகளிலும், கடந்த 4, 5 ஆகிய இரு நாட்கள் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாம் நடந்தது.
அதேபோல, வரும் 25, 26 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இம்முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தல் போன்றவைக்கு மனு அளிக்கலாம். இது தொடர்பாக விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் வளாகத்தில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்தார்.
பேரணியில், கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்றனர். வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பது மற்றும் வாக்களிப்பதின் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ - மாணவியர் ஏந்தி சென்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!