ADVERTISEMENT
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதுகுல வேணுகோபால பஜனை கோவிலில், பம்பை பாலகன் பக்த ஜனசபா சார்பில், 37வது ஆண்டு கணபதி பூஜை, மலர் பூஜை விழா நேற்று நடந்தது.
இதில், காலை 6:00 மணிக்கு கணபதி பூஜையும், மாலை 4:30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது.
திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள், குத்து விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்தனர்.
விநாயகர், துர்க்கை, மஹாலட்சுமி, சரஸ்வதி, அய்யப்பன் மற்றும் அவரவர் குல தெய்வத்தை வேண்டி பூஜை செய்தனர்.
இரவு 7:00 மணிக்கு அய்யப்பனுக்கு மலர் பூஜையும், தர்மசாஸ்தா பஜனை சபா குழுவினரின் பஜனையும் நடந்தது. அதை தொடர்ந்து பகவான் பாண்டுரங்க குருசாமி ஜோதி தரிசனம் காண்பித்தார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!