Load Image
Advertisement

வ.உ.சி., பூங்கா ரோட்டில் உருவாகிறது  உணவு வீதி மூன்று மாதங்களில் சுவைக்கலாம் சுகாதார உணவு

 A Food Street is being developed at VUC, Park Road    வ.உ.சி., பூங்கா ரோட்டில் உருவாகிறது  உணவு வீதி மூன்று மாதங்களில் சுவைக்கலாம் சுகாதார உணவு
ADVERTISEMENT
கோவை;கோவை வ.உ.சி., பூங்கா ரோட்டில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மாதிரி மற்றும் சுகாதார உணவு வீதியை மூன்று மாதங்களில் அமைக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின், 100 பகுதிகளில் ஆரோக்கியமான, சுகாதாரமான உணவு வகைகளை வழங்கும் விதமாக மத்திய அரசானது 'உணவு வீதிகள்' திட்டத்தை உணவுப்பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையக் குழு வாயிலாக செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் வாயிலாக உணவு வணிகத்தில் ஈடுபடுவோர், வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் தரமான உணவு களை வழங்க வழிவகை செய்ய முடியும். மேலும், நோய் பாதிப்புகளை தடுத்து, ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கங்களை மக்களிடம் ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், தேசிய சுகாதார திட்டத்தின் வாயிலாக மத்திய சுகாதாரத் துறையானது, மாதிரி மற்றும் சுகாதார உணவு வீதியை உருவாக்க தலா ரூ.1 கோடி நிதியை ஒதுக்கி உத்தரவிட்டது. தமிழகத்தில், சென்னை, கோவை வ.உ.சி., பூங்கா ரோடு உட்பட நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவையில் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டது. சுகாதாரமான குடிநீர், ஆரோக்கியமான உணவு தயாரிப்பு நிறுவனங்கள், சுகாதாரமான ஓட்டல்களை அமைப்பது குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றன.

அரசு அனுமதியை அடுத்து அவிநாசி ரோடு அடையும் வ.உ.சி., பூங்கா ரோட்டின் வலது புறம் தற்போது பணிகள் துவங்கப்பட்டு அஸ்திவாரம் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. பணிகளை மூன்று மாதங்களில் முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,'வ.உ.சி., பூங்கா ரோட்டில் இத்திட்டத்தில், 20 கடைகள் முதற்கட்டமாக இடம்பெறுகின்றன.

ஒவ்வொரு கடையும், 330 சதுரடியில் 'ஷட்டர்' கதவுடன் அமைக்கப்படும். நடைபாதை கற்கள், வாடிக்கையாளர் அமரும் இடம், கழிப்பிடம், திடக்கழிவு சேகரிப்பு தொட்டி, தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகளுடன் உணவு வீதி உருவாக்கப்படும்.

மூன்று மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு கடைகள் ஏலம் விடப்படும். அதன்பிறகு இரண்டாம் கட்டமாக கடைகள் அமைக்க பரிசீலிக்கப்படும்' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement