வாலிபால் லீக்; எஸ்.டி.சி., கருடா அணிகள் முதலிடம்
கோவை;மாவட்ட அளவிலான வாலிபால் லீக் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் எஸ்.டி.சி., கல்லுாரி மற்றும் பெண்கள் பிரிவில் கருடா அணிகள் முதலிடம் பிடித்தன.
கோவை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் 2023ம் ஆண்டுக்கான மாவட்ட லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானம் மற்றும் காளப்பட்டி ரோடு என்.ஜி.பி., கல்லுாரி மைதானம் ஆகிய இரு இடங்களில் நடந்தது.
இப்போட்டியில் மண்டல அளவில் நடத்தப்பட்ட போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த (ஆண்கள் மற்றும் பெண்கள்) எட்டு அணிகள் பங்கேற்று போட்டியிட்டன.
இதன் முதல் சுற்று லீக் அடிப்படையில் நடத்தப்பட்டு முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் ஆதிக்கம் செலுத்திய எஸ்.டி.சி., அணியினர், 2 - 0 என்ற நேர் செட் கணக்கில் போலீஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றனர்.பெண்கள் பிரிவுஇறுதிப்போட்டியில் கருடா கிளப் அணி 2 - 1 என்ற செட் கணக்கில் நிர்மலா கல்லுாரியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
வெற்றி பெற்ற வீரர் வீராங்கனையினருக்கு, கோவை மாவட்ட வாலிபால் சங்க நிர்வாகிகள் வேலுசாமி, விஜய் ரங்கராஜ், ரவிச்சந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இப்போட்டியில் முதல் இடம் பிடித்த அணிகள் நாமக்கல் மாவட்டத்தில் நடக்கவுள்ள மேற்கு மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!