மெஷினுக்கு ரூ.5.48 லட்சம் பெற்று ஏமாற்றிய நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
கோவை;அரவை மெஷினுக்கு 5.48 லட்சம் ரூபாய் பெற்று, சப்ளை செய்யாமல் ஏமாற்றிய நிறுவனம், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
கோவை, கணபதியில் மதன்குமார் என்பவர் இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். அதே பகுதியில் ஸ்டாலின் என்பவர் நடத்திய 'மேக் மெஷின் டூல்ஸ்' என்ற நிறுவனத்தில் அரவை மெஷின் வாங்க, 2019, ஏப்., 10 ல் ஆர்டர் கொடுத்தார். இதற்காக, ஸ்டேட் வங்கியில் 5.48 லட்சம் ரூபாய் கடன் பெற்று பணத்தை செலுத்தினார். இரண்டு மாதத்தில் மெஷின் சப்ளை செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், மெஷின் சப்ளை செய்யப்படவில்லை. பணத்தை திரும்ப வழங்க கோரி நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை.
கடன் கொடுத்த வங்கி நிர்வாகம், தவணை தொகையினை திருப்பி செலுத்த மதன்குமாருக்கு நெருக்கடி கொடுத்தது. மெஷின் வராததால் தொழில் துவங்க முடியாமல், வீணாக வாடகை மற்றும் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மதன்குமார், மெஷின் வாங்க கொடுத்த பணத்தை திரும்ப வழங்க கோரியும், இழப்பீடு கேட்டும் கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த நீதிமன்ற தலைவர் தங்கவேல், ''மெஷின் சப்ளை செய்வதாக பெற்ற 5.48 லட்சம் ரூபாயை மனுதாரருக்கு திருப்பிகொடுக்க வேண்டும். கட்டட வாடகை மற்றும் மின் கட்டணம் செலுத்திய தொகை, 95,000 ரூபாய் வழங்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடு, 25,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று எதிர்மனுதாரர் ஸ்டாலினுக்கு உத்தரவிட்டார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!