Load Image
Advertisement

பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் ஆர்.ஜே., மெட்ரிக்., பள்ளி அசத்தல்

கோவை:மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆர்.ஜே., மெட்ரிக்., பள்ளி அணி முதலிடம் பிடித்தது.

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் கிழக்கு மற்றும் கோவை ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் நலச்சங்க சார்பில், 14 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி சின்னவேடம்பட்டி டி.கே.எஸ்., பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.

இப்போட்டியில், இரண்டு பிரிவுகளையும் சேர்த்து, 30 அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிட்டன.

இப்போட்டியின், 19வயதுக்கு உட்பட்டோருக்கான இறுதிப்போட்டியில், முதலில் விளையாடிய ஆர்.ஜே., பள்ளி அணி 72 ரன்கள் சேர்த்தது. அணிக்காக பிரவீன் 36 ரன்கள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளி அணி, 52 ரன்கள் மட்டும் எடுக்க, 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.ஜே., மெட்ரிக்., பள்ளி அணி முதலிடம் பிடித்தது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி ராமசாமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் கோவை ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் நலச்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement