Load Image
Advertisement

மாவட்ட டேக்வாண்டோ எஸ்.பி.ஓ.ஏ., சாம்பியன் 

 District Taekwondo SPOA, Champion    மாவட்ட டேக்வாண்டோ எஸ்.பி.ஓ.ஏ., சாம்பியன் 
ADVERTISEMENT
கோவை;மாவட்ட அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை மாவட்ட டேக்வாண்டோ சங்கம் மற்றும் கோடிஸ்டா டேக்வாண்டோ அகாடமி சார்பில் சிறுவர்களுக்கான 'கிட்ஸ் டேக்வாண்டோ போட்டி, ஆர்.எஸ் புரம், மாரண்ண கவுடர் உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

சிறுவர், சிறுமியருக்கு 8,10,12, 14 மற்றும் 16 ஆகிய வயதினருக்கு பல்வேறு எடைப்பிரிவுகளில் பூம்சே மற்றும் கியோருகி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 270க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர்.

இதில் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவர்கள் 15 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 25 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்தனர். மாரண்ண கவுடர் பள்ளி அணி 10 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலப்பதக்கங்களுடன் இரண்டாமிடமும், பீபாள் பள்ளி 5 தங்கம், ஒரு வெண்கலத்துடன் மூன்றாமிடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உடற்கல்வி இயக்குனர் ராகவன் பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து நடந்த கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ சங்க தேர்தலில், சங்க தலைவராக லட்சுமண நாராயணன், செயலாளராக சிஜூ குமார், துணை தலைவர்களாக ராகவன், ஆனந்த், இணை செயலாளராக நடராஜன், ஜெகதீசன் மற்றும் பொருளாளராக சுரேஷ் கணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement