Load Image
Advertisement

நியாயம் கேட்டு காவல் நிலையம் சென்ற ஆட்டுக்குட்டி... ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்ற குட்டி...

 The lamb went to the police station for justice... the lamb returned home disappointed...     நியாயம் கேட்டு காவல் நிலையம் சென்ற ஆட்டுக்குட்டி... ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்ற குட்டி...
ADVERTISEMENT
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த வாழபட்டாம்பளயம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மணிகண்டன் வயது 45 இவர் தனக்கு சொந்தமாக நான்கு ஆட்டி குட்டிகளை வளர்த்து வருகிறார்

இந்நிலையில் நேற்று இவரது 4 ஆட்டுக்குட்டிகள் இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் ஜெயக்குமார் தந்தை பெயர் ஜெகதீசன் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளது இதனைப் பார்த்த ஜெயக்குமார் இரும்பு பைபால் ஆட்டுக்குட்டிகளையும் பலமாக தாக்கி காலை உடைத்து உள்ளார் மேலும் ஆட்டின் கொம்பை உடைத்து ஆட்டுகுட்டியை பலமாக தாக்கியுள்ளார். இதன் அடிப்படையில் ஆட்டுகுட்டியுடன் மணிகண்டன் ஆரோவில் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் ஜெயக்குமாரை காவல் நிலைய அழைத்து வந்து விசாரணை செய்தார். மேலும் திடீர் என மணிகண்டன் காவல் நிலையம் சென்று புகாரை திரும்ப பெறுவதாக கூறி எழுதிக் கொடுத்துள்ளார் மணிகண்டன் ஜெயக்குமார் சமரசம் செய்து கொண்டதாக கடிதம் எழுதிக் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்கு பதியாமல் அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தனர்

ஆட்டுக்குட்டியும் அழைத்துச் செல்லும்படி கூறியதால் ஆட்டுக்குட்டியை காவல் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். மேலும் இந்த ஆட்டுக்குட்டி நிலைமையைகண்டு அப்பகுதியில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்

வீட்டுக்குள் சென்றதாக கூறி ஆட்டுக்குட்டிகளை அடித்து துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து (6)

  • GANESUN - Chennai,இந்தியா

    21 ஆம் பக்க சமரசமோ....

  • Rajarajan - Thanjavur,இந்தியா

    அடப்பாவிங்களா, ஆட்டை அறுத்து தின்பவரிடம், அனுதாபத்தை எதிர்பார்க்கலாமா ??

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இதெற்கெல்லாம் சமரசம் கூடாது. நல்லா இருக்குது விடியல் ஆட்சி.

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    பாவம் .தொரத்தி இருக்கலாம் .மனுநீதி சோழன் ஆண்ட நாடு .ஆட்டுக்கு நீதி இல்லை ?

  • raja - Cotonou,பெனின்

    ஸ்டேஷன்ல இருந்தவன் எல்லாம் அய்யப்பன் கோயிலுக்கு மாலை போட்டு இருப்பாங்க போல.....நல்ல வேளை பாவம் உயிரோடு திருப்பியது... இல்லைன்னா பிரியாணி போட்டு இருப்பாங்க நம்ப மக்களின் நண்பர்கள்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்