Load Image
Advertisement

செங்கை தொழில் முதலீடுகள் மாநாடு ரூ.2,590 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

 2,590 Crore Memorandum of Understanding on Senkai Industrial Investments Conference    செங்கை தொழில் முதலீடுகள் மாநாடு ரூ.2,590 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADVERTISEMENT
மறைமலை நகர்:உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாடு சிங்கபெருமாள் கோவிலில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது.

இந்த மாநாட்டிற்கு கலெக்டர் ராகுல்நாத் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், ரூ.2,590 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:

வேளாண்மைக்கு அடுத்தபடியாக மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்குவது குறு, சிறு தொழில் நிறுவனங்கள்.

முதல்வர் தலைமையில், ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. தொழில் துறையில், இந்திய அளவில் 14 இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 3ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

முதலிடத்திற்கு கொண்டுவர, முதல்வர் அவர்களால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆட்சி பொறுப்பு ஏற்றபின், புதிதாக 8 சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளன. புதிதாக, 8 சிக்கோ தொழிற்பேட்டைகளுக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

அது மட்டுமின்றி, 164 குறு, சிறு நிறுவனங்கள் துவங்கப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, 9,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் துறை வணிக ஆணையர் நிர்மல்ராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, செங்கல்பட்டு தி.மு.க., -- எம்.எல்.ஏ., வரலட்சுமி செய்யூர் வி.சி., - - எம்.எல்.ஏ., பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement