Load Image
Advertisement

அபராதம் என்ற பெயரில் வசூல் கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

 Vasul college students are protesting in the name of fine    அபராதம் என்ற பெயரில் வசூல் கல்லுாரி மாணவர்கள் போராட்டம்
ADVERTISEMENT
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் தனியார் கல்லுாரி மாணவர்கள், நேற்று மாலை கல்லுாரி நுழைவு வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அபராதம் என்ற பெயரில் கல்லுாரி கட்டணம் வசூல் செய்வதாக கூறி, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கல்லுாரி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அபராத கட்டணம் செலுத்த மறுக்கும் மாணவர்களுக்கு, இன்று துவங்கும் தேர்வுக்கான நுழைவு சீட்டை கல்லுாரி நிர்வாகம் வழங்கவில்லை என, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

அங்கு வந்த கேளம்பாக்கம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கல்லுாரி நிர்வாகம் மாணவர்களிடம் சமாதானம் பேசியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கல்லுாரி உள்ளே சென்றனர்.

நிறைவில், அபராத கட்டணம் செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்களுக்கு, தேர்வு அவசியத்தை கருதி, நுழைவு சீட்டு வழங்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement