ரூ.பல லட்சம் மோசடி; பெண் மீது புகார்
திருப்பூர்:பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் மீது கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்: திருப்பூர், அம்மாபாளையத்தை சேர்ந்தவர் லாவண்யா, பர்னிச்சர் தொழில் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் லாபம் தருவதாகவும் கூறினார். எங்களிடம் தலா 10, 12, 9 லட்சம் என பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டார். எந்த தொழிலும் செய்யவில்லை.
அவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதாக கூறியதன் அடிப்படையிலேயே நம்பி அவரிடம் தொகை கொடுத்தோம். பள்ளியில் விசாரித்தபோது, அவர் நிரந்தர ஆசிரியர் இல்லை, தற்காலிக ஆசிரியர் என்பது தெரியவந்தது. பணம் வாங்கி ஏமாற்றியது தொடர்பாக, போலீசில் புகார் அளித்தோம். லாவண்யாவின் கணவர் பிரபு, நிருபர் எனக்கூறி மிரட்டுகிறார்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!