Load Image
Advertisement

சிறு நிறுவனங்களுக்கு ரூ.40 லட்சம் கடன் திட்டம்: தாய்கோ வங்கி துவக்கம்

 Rs 40 Lakh Loan Scheme for Small Enterprises: Taiko Bank Launched   சிறு நிறுவனங்களுக்கு ரூ.40 லட்சம்   கடன் திட்டம்: தாய்கோ வங்கி துவக்கம்
ADVERTISEMENT
சென்னை:தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையில் இடம்பெறும், தொழில் வணிக ஆணையரின் கீழ் தேயிலை, தென்னை நார் உட்பட, 289 தொழிற்கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.

இந்த சங்கங்களுக்கு புதிய தொழில் துவங்கவும், நடைமுறை மூலதன செலவுகளுக்கும், 'தாய்கோ' எனப்படும் தமிழக தொழில் கூட்டுறவு வங்கி கடன்களை வழங்குகிறது. இது, தற்போது தனிநபர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்களுக்கும் கடன்களை வழங்குகிறது.

இதில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் தனி கவனம் செலுத்துகிறது.

அதன்படி, ஒரு நிறுவனத்துக்கு நடைமுறை மூலதனக் கடனாக, அதிகபட்சம், 40 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதற்கு, 10 சதவீதம் ஆண்டு வட்டி.

இதுதவிர, 'பிளை எம்.எஸ்.எம்.இ' திட்டத்தில், சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் மனைகளை வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது. இதற்காக, தாய்கோ வங்கிக்கும், 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி கழகத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அத்திட்டத்தின் கீழ், தனி நபருக்கு 40 லட்சம் ரூபாய் வரையும்; கூட்டு நிறுவனங்களுக்கு இரண்டு கோடி ரூபாய் வரையும் கடன் வழங்கப்படுகிறது. இந்த விபரம், பலருக்கு தெரிவதில்லை.

இதுகுறித்து, தாய்கோ வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநிலம் முழுதும் தாய்கோ வங்கிக்கு, 47 கிளைகள் உள்ளன. சிறு குறு, மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement