Load Image
Advertisement

லோக்சபா தேர்தலில் காங்.,கிற்கு ஒன்பது தொகுதிகள் தான்திட்டவட்டம்?

In the Lok Sabha elections, nine constituencies for the Congress?   லோக்சபா தேர்தலில் காங்.,கிற்கு ஒன்பது தொகுதிகள் தான்திட்டவட்டம்?
ADVERTISEMENT
'லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு, ஒன்பது தொகுதிகள் தான்' என, தி.மு.க., மேலிடம் திட்டவட்ட முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. கூடுதல் தொகுதிகளை பெற வேண்டும் என்ற, கோஷ்டி தலைவர்களின் ஆசைக்கு, தி.மு.க., தரப்பு டில்லியில் பேசி அணை போட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்ததும், மாவட்ட தலைவர்கள் சிலர், 'இம்முறை வாரிசுகளுக்கும், தற்போதைய எம்.பி.,க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கக்கூடாது' என, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை, காங்கிரசுக்கு தி.மு.க., ஒதுக்கியது. தேனியை தவிர மற்ற ஒன்பது தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

அதனால், இம்முறை, 15 தொகுதிகளை, தி.மு.க.,விடம் கேட்டுப் பெற வேண்டும் என்ற கோஷம், தமிழக காங்கிரசில் எழுந்துள்ளது.

வெளிப்படை



சென்னையில் நேற்று முன்தினம் நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், 'தி.மு.க.,விடம் பேசி, எப்படியாவது, 15 தொகுதிகளை பெற்றாக வேண்டும்' என, கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பேசிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, லோக்சபா தேர்தல் செயல் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, சென்னை சத்தியமூர்த்தி பவனிற்கு நேற்று முன்தினம், மாவட்ட தலைவர்களை, அக்கட்சியின் தமிழக தலைவர் அழகிரி அழைத்திருந்தார்.

இரண்டரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகள் கேட்கப்பட வேண்டும் என்றும், உடன்படாத பட்சத்தில் மாற்று பாதை பற்றி சிந்திக்க வேண்டும் என்றும், சிலர் வெளிப்படையாக பேசி உள்ளனர்.

அதன் விபரம்:

மாவட்ட தலைவரும், கட்சியின் எஸ்.சி., பிரிவு தலைவருமான ரஞ்சன்குமார் பேசியதாவது:

ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே எம்.எல்.ஏ., - எம்.பி.,யாக உள்ளனர். அவர்கள் கட்சிக்காக பெரிதாக எதையும் செய்ய முன்வருவதில்லை. இந்த கூட்டத்துக்கு கூட, அவர்கள் வரவில்லை. அவர்களுக்கு எக்காரணம் கொண்டும், மீண்டும் வாய்ப்பு அளிக்கக் கூடாது.

மரியாதை



'நீட்' தேர்வு விலக்கை வலியுறுத்தி கையெழுத்து பெற, சில நாட்களுக்கு முன், அமைச்சர் உதயநிதி, சத்தியமூர்த்தி பவன் வந்தார்.

இந்த கூட்டத்துக்கு வராத முன்னாள் தலைவர்கள், அன்றைய தினம் ஆஜராகி இருந்தனர்.

அதற்கு சில நாட்களுக்கு முன், இந்திரா பிறந்த நாள் விழா நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு, உதயநிதிக்காக கூடிய முன்னாள் தலைவர்கள் யாருமே வரவில்லை.

இதுதான், கட்சி மீதும், நம் தலைவர்கள் மீதும் முன்னாள் தலைவர்கள் வைத்திருக்கும் மரியாதை. இனிமேலாவது கட்சிக்காக யார் உண்மையாக உழைக்கின்றனரோ, அவர்களுக்கு, 'சீட்' கொடுங்கள்; அதுவும் சுழற்சி முறையில் கொடுங்கள்.

திருநெல்வேலி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன்: தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகளை பெற வேண்டும். பா.ஜ.,வை விட்டு விலகி வந்திருக்கும் அ.தி.மு.க.,வினர், நம்மோடு காங்கிரஸ் வராதா என்று ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர். தேவையானால், அந்த வாய்ப்பையும் தேர்வு செய்ய தவறக்கூடாது.

எல்லாரும் அரசியலில் கெடுபிடியாக இருந்து, வெற்றியை நோக்கி மட்டும் யோசிக்கும் போது, காங்கிரசும் அதேபாதையில்தான் செல்ல வேண்டும்.

திருவாரூர் மாவட்ட தலைவர் துரைவேலன்: தற்போதைய எம்.பி.,க்கள் எட்டு பேருக்கும், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரக்கூடாது. கட்சிக்காக உழைக்கும் மாவட்ட தலைவர்கள், இளைஞர்களுக்கு தான் இம்முறை வாய்ப்பு தரப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசியுள்ளனர்.

இதற்கிடையில், லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து, காங்கிரஸ் மேலிடத்திடம் ஏற்கனவே பேசி முடித்து விட்டதாக, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுகுறித்து, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:

அழகிரியின் தீவிர ஆதரவாளர் ரஞ்சன்குமார். அவர் பேச்சை அழகிரியின் பேச்சாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். கட்சியின் முன்னாள் தலைவர்களை கண்டிப்பது போல பேசியது சரிதான். அழகிரிக்கும், காங்கிரசுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அமைச்சர் உதயநிதி, சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றதை உள்கட்சி பிரச்னையோடு இணைத்து பேசியது சரியல்ல.

கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில், தேனி தொகுதியில், முன்னாள் தலைவர் இளங்கோவன் தோல்வி அடைந்தார்.

அவரது மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான திருமகன் ஈவெரா மறைந்ததை அடுத்து, அங்கு நடந்த இடைத்தேர்தலில், இளங்கோவனை தி.மு.க., தான் வெற்றி பெற வைத்தது. வரும் லோக்சபா தேர்தலில், தேனியை தவிர, புதுச்சேரியுடன் சேர்த்து ஒன்பது தொகுதிகள் தான் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்பதை, காங்கிரஸ் மேலிடத்திடம், தி.மு.க., தலைமை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதில், எந்த மாற்றமும் இல்லை.

இங்கிருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்; கேட்கலாம். தி.மு.க., முடிவு மாறாது. அது மட்டுமின்றி, காங்கிரசுக்கு தரப்படும் தொகுதிகளில் ஒன்றை, கமல் கட்சிக்கு ஒதுக்கும் எண்ணத்தில் தான் தி.மு.க., உள்ளது. அதனால், காங்கிரசுக்கு, 15 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பே இல்லை.

அதேநேரத்தில், காங்கிரசுக்கு கடந்த தேர்தலில், திருவள்ளூர் தனி தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. இந்த முறை இரண்டு தனி தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., இசைவு தெரிவித்துள்ளது. அதேபோல, காங்கிரஸ் சிட்டிங் தொகுதிகளான கரூர், சிவகங்கை, திருவள்ளூர், திருச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு பதிலாக, வேறு தொகுதிகளை மாற்றி கொடுக்கவும், தி.மு.க., திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -



வாசகர் கருத்து (33)

  • முருகன் -

    இதுவே அதிகம் தான்

  • பேசும் தமிழன் -

    என்னது... தமிழகத்தில் இல்லாத கான் கிராஸ் கட்சிக்கு... 9 தொகுதிககளா.... அப்போ தமிழகம் முழுவதும் உள்ள சைகோ... திரு ஆமா.... அவர்களுக்கு 30 தொகுதிகள் மட்டும் தான் கிடைக்குமா ???

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    காங்கிரஸ் இங்கு காணாமல் போனதிற்கு காரணம் திமுகதான். இப்போது திமுக இல்லாமல் பதவி இல்லை என்ற நிலை. கையேந்தும் நிலை. இதை காங்கிரஸ் உணர்ந்தால் மட்டுமே வளர்ச்சி.

  • ஆரூர் ரங் -

    தீயமுக தேர்தல் டிக்கட்போல காங். சீட்களையும் சொறிவாலயத்தில் ஏலம் போடலாம். ஏலம் எடுக்க ஆள் வராது😉. கைக்காசை செலவழித்து எதிர்கட்சி வரிசையில் உட்கார யார் வருவர்? பெருமைக்கு எருமை மேய்க்கும் ஆசை?

    • Velan Iyengaar - Sydney

      முதலில் பிஜேபி நிலவரம் எவ்ளோ கலவரம் என்று எண்ணி பாருங்க..

  • ஆரூர் ரங் -

    காங்கிரஸ் வேட்பாளர்களையும் திமுகவே தேர்ந்தெடுக்கப்போகிறது. மீறி குரலெழுப்பினால் 9 இடத்திலும் உதயசூரியன் சின்னத்திலேயே🙃 போட்டியிட கண்டிஷன் போடுவார்கள்.நிரந்தர அடிமைகளுக்கு அளவை முடிவு செய்யும் உரிமை கிடையாது.

    • Velan Iyengaar - Sydney

      தெரியுதிலா.. சும்மா அதிருதுல்ல...அப்படியே அங்க பாருங்க....நாற்பதுல நின்னா வாக்கு சதவிகிதத்துல எங்கே நாம் தமிழரை விட கம்மியா வாங்கி மானக்கேடா ஆயிடுமோ என்று பயந்து எத்தனை சீட்டுகளை கூட்டணி என்ற பெயரில் உதிரி கட்சிகளுக்கு தள்ளிவிட பார்க்கிறார்கள் என்று ஹா ஹா ஹா .. நினைத்தாலே ஒரே சிரிப்பு தான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement