Load Image
Advertisement

பெருந்துறை சிப்காட் பிரச்னைக்கு தீர்வு ரூ.40 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்

 The solution to Perundurais sipcot problem is a treatment plant at a cost of Rs 40 crore    பெருந்துறை  சிப்காட் பிரச்னைக்கு தீர்வு ரூ.40 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்
ADVERTISEMENT
ஈரோடு:''சிப்காட் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 40 கோடி ரூபாயில், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது,'' என, தமிழக சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில், சாயக்கழிவு நீர் வெளியேற்றும் பிரச்னையால் பல கிராமங்கள், விளை நிலங்கள், குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் பாதிக்கப்பட்டன.

அப்பகுதியினர் நடத்திய தொடர் போராட்டத்தால், அரசுக்கு அழுத்தம் ஏற்பட்ட நிலையில், சிப்காட்டுக்கு நேற்று வந்த அமைச்சர் உதயநிதி, கிராம மக்களிடம் பேசினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

பெருந்துறை சிப்காட்டில், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது, 10 ஆண்டுகளுக்கு மேல் தொடரும் கோரிக்கை.

இங்கு, 157 தொழிற்சாலைகள் உள்ளன.

அவற்றுக்காக இவ்வளாகத்தில், 40 கோடி ரூபாயில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, நேற்று முன்தினம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த 8 மாதத்தில், பணி முடிந்து பயன்பாட்டுக்கு வரும். தினமும், 20 லட்சம் லிட்டர் அனைத்து வகை கழிவுநீரும் சுத்திகரிக்கப் படும்.

இவ்வாறு கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement