ADVERTISEMENT
அனுப்பர்பாளையம்:வடக்கு ஆர்.டி.ஓ.,வை தாக்கிய மினி பஸ் உரிமையாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையத்தை சேர்ந்த அரோமா மினி பஸ் உரிமையாளர் ரவிக்குமார், 48, பாப்பநாயக்கன்பாளையம் புதுராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 54, கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பால்மர் தோட்டம் பகுதியை சேர்ந்த பஸ் நிறுவன மேலாளர் சுரேந்தர், 24, ஆகிய மூன்று பேர் போக்குவரத்து வட்டார அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அலுவலகத்தில் பணியில் இருந்த, திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜிடம், மினி பஸ் உரிமம் பெறுவது குறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கி உள்ளனர்.
இது குறித்து, ஜெயதேவ்ராஜ், 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, மினிபஸ் உரிமையாளர் ரவிக்குமார், அவரது மேலாளர் சுரேந்தர், ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரவிசந்திரனை தேடி வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!