ஐ.டி., பெண் ஊழியரிடம் ரூ.17.76 லட்சம் மோசடி
திருப்பூர்:திருப்பூரில், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து, ஐ.டி., பெண் ஊழியரிடம், 17.76 லட்சம் ரூபாயை மோசடி செய்தனர்.
திருப்பூர், காங்கயம் ரோட்டை சேர்ந்த, 24 வயது இளம்பெண்; ஐ.டி., நிறுவன ஊழியர். கடந்த சில மாதங்களாக 'ஒர்க் பிரம் ேஹாம்' என்ற அடிப்படையில், வேலை செய்து வருகிறார். கடந்த, ஒரு வாரத்துக்கு முன், இவரது மொபைல் போனுக்கு பகுதி நேரம் வேலை தொடர்பாக 'லிங்க்' வந்தது.
அதில், இன்ஸ்டாகிராம் பக்கங்களை பின்தொடர்ந்தால், அதன் மூலம் வருவாய் ஈட்டலாம் என கூறி நம்ப வைத்தனர். இதனால், இளம்பெண் பின்தொடர்ந்தும், அவர்கள் கொடுக்கும் 'டாஸ்க்கு'களை முடித்து சில ஆயிரங்களை பெற்றார். தொடர்ந்து, கிரிப்டோ கரன்சியில் டிரேடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என்று கூறி நம்ப வைத்தனர்.
இதனை நம்பிய அப்பெண், பல்வேறு கட்டங்களாக, 17 லட்சத்து, 76 ஆயிரத்து, 800 ரூபாயை முதலீடு செய்தார். ஆனால், கட்டிய பணத்தை மீண்டும் பெற முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண், திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!