பார் ஊழியர் கொலை உரிமையாளருக்கு ஆயுள்
திருப்பூர்;'பார்' ஊழியரை கொலை செய்த வழக்கில், 'பார்' உரிமையாளருக்கு திருப்பூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ராமநாதபுரம், நத்தக்கோட்டையைச் சேர்ந்தவர் ரகுபதி, 22. பெருமாநல்லுாரில் 'டாஸ்மாக்' மதுக்கடை அருகே, கண்ணப்பன் நடத்திய 'பாரில்' வேலை செய்து வந்தார். கண்ணப்பன் வேறு சில இடங்களிலும் நடத்திய 'பாரில்' பணியாற்றும் தினேஷ், கார்த்தி, விவேக் ஆகியோர் ரகுபதிக்கு நண்பர்களாகினர்.
இவர்கள் நான்கு பேரும், ஊத்துக்குளி - அருகம்பாளையத்தில் உள்ள மற்றொரு 'பாரில்' வேலைக்கு சேர்ந்தனர். இதனால், ஆத்திரமடைந்த கண்ணப்பன், 2018 மார்ச், 12ம் தேதி தன் நண்பர்களுடன் அருகம்பாளையம் 'பாருக்கு' சென்றார்.
அதில் ஏற்பட்ட தகராறில், கண்ணப்பன், ரகு பதியை கத்தியால், குத்தினார். தடுக்க வந்த கார்த்திக், விவேக் ஆகியோரையும் காயப்படுத்தினார். படுகாயமடைந்த ரகுபதி உயிரிழந்தார். ஊத்துக்குளி போலீசார் கண்ணப்பனை கைது செய்தனர்.
இவ்வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் குற்றத்துறை வக்கீல் கனகசபாபதி ஆஜரானார்.
கண்ணப்பனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!