Load Image
Advertisement

393 லட்சம் பேல் பஞ்சு கிடைக்கும் இந்திய பருத்தி கழகம் கணிப்பு

 Cotton Corporation of India predicts 393 lakh bales of cotton    393 லட்சம் பேல் பஞ்சு கிடைக்கும் இந்திய பருத்தி கழகம் கணிப்பு
ADVERTISEMENT
திருப்பூர்:நடப்பு பருத்தி ஆண்டில், மொத்த பஞ்சு வரத்து, 392.65 லட்சம் 'பேல்'களாகவும், மொத்த தேவை, 335 லட்சம் 'பேல்'களாகவும் இருக்குமென, இந்திய பருத்தி கழகம் தெரிவித்துள்ளது.

இந்திய பருத்தி கழகம், ஒவ்வொரு ஆண்டும் பருத்தி மகசூல் மற்றும் ஒட்டுமொத்த தேவைகளை கணக்கிட்டு, பருத்தி பஞ்சு பரிவர்த்தனையை கண்காணிக்கிறது.

கடந்த பருத்தி ஆண்டான, 2022 அக்., - 2023 செப்., வரை, பருத்தி விளைச்சல், 336.60 லட்சம் 'பேல்' ஆக இருந்தது. ஒரு பேல் என்பது, 170 கிலோவாகும்.

இறக்குமதி 14.30 லட்சம் பேல்; தொடக்க கையிருப்பு 39.48 லட்சம் பேல் என, மொத்த வரத்து 390.58 லட்சம் பேல்களாக இருந்தது.

தற்போது, நடப்பு பருத்தி ஆண்டுக்கான, 2023 அக்., -2024 செப்., பருத்தி இருப்பு மற்றும் வரத்து விபரத்தை, இந்திய பருத்தி கழகம் மதிப்பீடு செய்து, அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தொடக்க கையிருப்பாக, 64.08 லட்சம் பேல் பஞ்சு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தி மகசூல், 316.57 லட்சம் பேல் அளவுக்கு இருக்கும் என்றும், 12 லட்சம் பேல் வரை இறக்குமதியாகும் என்றும் கணக்கிட்டுள்ளது.

நுாற்பாலை தேவைக்கு 294 லட்சம் பேல், ஜவுளி அல்லாத தேவைகளுக்கு 16 லட்சம் பேல் தேவைப்படும் என, கணக்கிட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் எனப்படும் 'டாஸ்மா' தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:

இந்திய பருத்தி கழக அறிக்கையில், நடப்பாண்டின் மொத்த வரத்து, 392.65 லட்சம் பேல்களாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி, 25 லட்சம் பேல் உட்பட, மொத்த தேவை, 335 லட்சமாக இருக்கும் எனவும் கணக்கிட்டுள்ளது.

ஒரு கேண்டி எனப்படும் 356 கிலோ பஞ்சு, 56,000 - 57,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நடப்பு சீசனில் இதுவரை, 49.71 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது. வரத்து துவங்கியுள்ளதால், பஞ்சு விலையில் பெரிய மாற்றமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement