கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: பா.ஜ., வினர் குற்றச்சாட்டு
வெள்ளகோவில்;வெள்ளகோவிலில், கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்து, டாஸ்மாக் கடைக்கு, வாடகைக்கு விட்டதை அகற்ற வலியுறுத்தி பா.ஜ., வினர் மனு அளித்தனர்.
திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டு தலைவர் சங்கரகோபால் தலைமையில் கட்சியினர், சிவன்மலை கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளரி டம் அளித்த புகார் மனு:
காங்கயம் தாலுகா, வெள்ளகோவில் கிராமத்தில், சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான, 6.6 எக்டர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை வேலப்பநாயக்கன் வலசு கிராமத்தை சேர்ந்த தனி நபர், கடையை கட்டி 'டாஸ்மாக்' மதுக்கடைக்கு வாடகைக்கு விட்டு, வாடகையை பெற்று வருகிறார்.
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, அறநிலையத்துறைக்கு வருமான இழப்பு ஏற்படுத்துகிறார். இதுகுறித்து விசாரித்து, கோவில் சொத்தை மீட்டு, அதில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!