அன்னதானத்துக்கு நிதி எம்.எல்.ஏ., வழங்கல்
திருப்பூர்:திருவண்ணாமலையில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சிக்கு, திருப்பூர் எம்.எல்.ஏ., நிதி வழங்கினார்.
திருவண்ணாமலை சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், ஆண்டு தோறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, திருவண்ணாமலையில், கிரி வலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அவ்வகையில், 41 வது ஆண்டாக, கிரி வலப் பாதையில் 18 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், 2.5 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். இதனை டிரஸ்ட் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், முருகேசன், மோகனசுந்தரம், சிவகுமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தி.மு.க., வக்கீல் அணி முன்னாள் அமைப்பாளர் விவேகானந்தன் உட்பட பலர் உடனிருந்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!