Load Image
Advertisement

வாக்காளர் சிறப்பு முகாம்; திருநங்கையர் ஆர்வம்

 Voter Special Camp; Transgender interest    வாக்காளர் சிறப்பு முகாம்; திருநங்கையர் ஆர்வம்
ADVERTISEMENT
திருப்பூர்:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்காக திருநங்கையர், 50 பேர் சிறப்பு முகாமில் விண்ணப்பித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த அக்., 27ம் தேதி முதல் சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்று வருகிறது. 2,520 ஓட்டுச்சாவடி மையங்களிலும், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி, தொகுதி மாற்றங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதுதவிர, Voter Helpline மொபைல் செயலி, https://voters.ec.gov.in என்கிற இணையதளம் வாயிலாகவும், பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு வாக்காளர்கள் விண்ணப்பித்துவருகின்றனர். வாக்காளர் வரைவு பட்டியலில், திருநங்கைகள் 335 பேர் இடம்பெற்றுள்ளனர்.

சமூக நலத்துறை சார்பில், திருநங்கையருக்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் மற்றும் சமூக நலத்துறையினர் பங்கேற்றனர்.

திருநங்கையர், திருநம்பியர் ஆர்வமுடன்பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் - 6, திருத்தங்களுக்கு படிவம் - 8 பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து வழங்கினர். முகாமில் திருநங்கையர், திரும்பியர், 50 பேர் பெயர் சேர்த்தல், நீக்கத்துக்கு விண்ணப்பம் அளித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement