Load Image
Advertisement

பல்லாங்குழி சாலை... பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்!

 Pallanguzhi Road... pitiful motorists!    பல்லாங்குழி சாலை... பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்!
ADVERTISEMENT
மாநகராட்சி கவனத்துக்கு...

கோவில்வழி மாநகராட்சி நகர் நல மையத்தில், செவ்வாய்க் கிழமை கர்பிணி பெண்களுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் பலரும் வந்து வரிசையில் காத்திருந்து சிரமப்படுகின்றனர். வாரத்தின் இரு நாள் டாக்டர் வந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- கோபால், கோவில்வழி.

குப்பை அள்ளுங்க...

திருமுருகன்பூண்டி - பூலுவப்பட்டி ரிங்ரோட்டில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும். குப்பை தேக்கத்தால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- விஜய்ஆனந்த், பூலுவப்பட்டி. (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், மணியகாரம்பாளையம் ரிங்ரோட்டில் குழாய் உடைந்து, தண்ணீர் வழிந்தோடுகிறது. சாலை சேதமாகும் முன், உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- விநாயகம், மணியாரம்பாளையம். (படம் உண்டு)

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு - அணைக்காடு சந்திப்பு சாலையில், குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சீர் செய்ய வேண்டும்.

- சுவாமிநாதன், அணைக்காடு. (படம் உண்டு)

குழியை மூடுங்க...

திருப்பூர், 56வது வார்டு, செரங்காடு, மசூதி வீதியில் நடுரோட்டில் உள்ள குழியை மூட வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

- முருகன், செரங்காடு. (படம் உண்டு)

சாலை சீரமைக்கலாமே!

திருப்பூர், அங்கேரிபாளையம், ஏ.வி.பி., ஸ்கூல் ரோட்டில், தார் பெயர்ந்து, ஜல்லிக்கற்கள் மட்டுமே உள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். சாலை அமைக்க வேண்டும்.

- தேன்மலர், அங்கேரிபாளையம்.

திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில் சாலை சேதமாகியுள்ளது. வேகமாக வருவோர் தடுமாறி, செல்கின்றனர். சிலர் விழுந்து விடுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.

- அபித், பங்களா ஸ்டாப். (படம் உண்டு)

திருப்பூர், 15 வேலம்பாளையம் - அனுப்பர்பாளையம் மின்மயான சாலை, பெஸ்ட் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வெளியாகி, சாலை சேதமாகியுள்ளது. சீரமைக்க வேண்டும்.

- வேல்ராஜ், அனுப்பர்பாளையம். (படம் உண்டு)

தெருவிளக்கு எரிவதில்லை

திருப்பூர், பிரிட்ஜ்வே காலனி, ஐந்தாவது வீதியில், 15 நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி, புதுவிளக்கு பொருத்த வேண்டும்.

- உமாசங்கர், பிரிட்ஜ்வே காலனி. (படம் உண்டு)

மங்கலம், மாகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள மூன்று தெருவிளக்குகளும் எரிவதில்லை. வீதி முழுதும் இருள் சூழந்து காணப்படுகிறது.

- புவனா, மங்கலம்.

ரியாக் ஷன்

ஜல்லி கொட்டுறாங்க...

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, ரயில்வே கேட் ஸ்டாப்பில், சாலை சேதமாகியிருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. ஜல்லி கொட்டி, சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

- தட்சணாமூர்த்தி, ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)

சுத்தமானது கால்வாய்

திருப்பூர், பெரிச்சிபாளையம், அம்மணியம்மாள் லே-அவுட் இரண்டாவது வீதியில், கால்வாய் அடைப்பு ஏற்பட்டிருந்தது. செய்தி வெளியான பின், கால்வாயை சுத்தம் செய்து விட்டனர்.

- மணி, அம்மணியம்மாள் லே-அவுட். (படம் உண்டு)


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement