ஹிந்து மயானத்தில் சிலுவையுடன் சமாதி
திருப்பூர்;செல்லாண்டியம்மன் துறை மயானத்தில் ஒரு சமாதியில் சிலுவை நடப்பட்டிருந்தது. இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் வீதியில், செல்லாண்டியம்மன் துறை பகுதியில் மயானம் உள்ளது. இதில் ஹிந்துக்கள் இறந்தால், சடலங்கள் அடக்கம் செய்யப்படும் நடைமுறை உள்ளது. கடந்த வாரம், ஒரு சடலம் அடக்கம் செய்யப்பட்டு, சிலுவை நடப்பட்டிருந்தது.
இது குறித்து தகவல் அறிந்து மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்வேல் தலைமையில், நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று காலை மயானம் முன் திரண்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து மாநகராட்சி உதவி கமிஷனர் வினோத், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், தெற்கு போலீசார் மயானத்துக்கு விரைந்தனர். அடக்கம் செய்த சடலம் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்து, அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு வரவழைத்தனர்.
குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், இறந்தவர் ரவி, 52, காரமடை அருகே பர்லி மின் வாரிய அலுவலக ஊழியர் என தெரிந்தது. கடந்த வாரம் உறவினர் வீட்டுக்கு திருப்பூர் வந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாத போது, கிறிஸ்துவ ஜெபக் கூட்டங்களுக்குச் சென்று வந்துள்ளார். தனது சமாதி மீது சிலுவை அடையாளம் வைக்க வேண்டும் என அவர் கூறியிருந்ததால் இவ்வாறு செய்ததாக அவர்கள் கூறினர்.
இதனால், அவர் குடும்பத்தினர், சமாதி மீதிருந்த சிலுவை சின்னத்தை அகற்றியதோடு, ஹிந்து மத முறைப்படி வழிபாடு நடத்திச் சென்றனர். இதனால், இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.
பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்வேல் கூறுகையில், ''மாநகராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பிலுள்ள மயானங்கள் உரிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின்றி உள்ளது. சுற்றிலும் சமூக விரோதிகள் நடமாட்டம், கஞ்சா, மதுப்புழக்கம் உள்ளது. அருகேயுள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதிகாரிகள் கண்டு கொள்ளாமல், அந்த நிலம் பறிபோகும் அபாயத்தில் உள்ளது,'' என்றார்.
தொடர்ந்து, பொக்லைன் வாகனம் மற்றும் துாய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, மயான வளாகம் முழுவதும் சீரமைப்பு பணி துவங்கியது. நுழைவாயில் 'கேட்' பொருத்தி, பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!