Load Image
Advertisement

பட்டாவில் பெயர் சேர்த்தது எப்படி? ஆர்.டி.ஐ.,யில் அதிகாரிகள் மழுப்பல்

திருப்பூர்;நிலம் குறித்த பட்டா ஆவணத்தில் புதிய நபர்கள் பெயர் சேர்த்தது எப்படி என்ற கேள்விக்கு, அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை என வரு வாய்த்துறை பதில் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், நெருப்பெரிச்சலை சேர்ந்த காளியப்பன் மகன் சரவணகுமார். இவர்களுக்கு சொந்தமான நிலம் நெருப்பெரிச்சல் கிராமம், க.ச.எண்: 161, 161/1பி1 மற்றும் 161/1ஏ ஆகியவற்றில் உள்ளது.

இதற்காக, வருவாய்த்துறை வழங்கிய பட்டாக்கள் எண்: 2559ல், நான்கு பேருக்கு பதிலாக, 22 பேர் பெயர்களும், பட்ட எண்: 2277, ஏழு பேருக்கு பதிலாக, 18 பேரின் பெயர்களும், பட்டா எண்: 1773ல், இரண்டு பேருக்கு பதிலாக, 20 பேரின் பெயர்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்த ஆவணங்களை சரி பார்த்த போது, பல்வேறு கால கட்டங்களில் கூடுதலாக இந்த நபர்கள் சேர்க்கப்பட்டது தெரிய வந்தது. அதிர்ச்சிடையந்த சரவணகுமார், ஜூலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விவரம் கேட்டு, மனு அளித்தார்.

இதற்கு நான்கு மாதம் கழித்து கடந்த, 14ம் தேதி, வடக்கு தாலுகா அலுவலக, பொது தகவல் தரும் அலுவலர் பதில் அனுப்பியுள்ளார்.

அதில், மூன்று பட்டாக்களிலும் புதிய நபர்கள் சேர்க்கப்பட்டதற்கான மூல ஆவணங்கள் எதுவும் அலுவலகத்தில் இல்லை. அனைத்தும் ஆன்லைன் நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டதால், அதற்கான ஆவணங்கள் இல்லை.

இந்த நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் பெயர் மற்றும் பதவியும், அவர்களது பணிக்காலம் குறித்த விவரங்களும் அலுவலக பராமரிப்பு கோப்புகளில் இல்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலால் அதிர்ச்சியடைந்த சரவணக்குமார் இது குறித்து மேல் முறையீட்டு அலுவலருக்கு புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement