Load Image
Advertisement

முப்பெரும் விழாவில் விவசாயிகளுக்கு கோ தானம்

 Donation of cows to farmers on the occasion of the Tribhar Festival    முப்பெரும் விழாவில் விவசாயிகளுக்கு கோ தானம்
ADVERTISEMENT
அவிநாசி:அவிநாசி அருகே வஞ்சிபாளையம், சாமந்தங்கோட்டையில், காயத்ரி பரிவார் கோசாலை மைதானத்தில் கோபாஷ்டமி விழா, 108 கோ பூஜை மற்றும் 108 சிறு விவசாயிகளுக்கு கோ தானம் வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவை, கோவை கவுமார மடாலயம் ராமானந்த குமரகுருபர சுவாமி ஆசியுரை வழங்கி துவக்கி வைத்தார்.

சங்கரண்டாம்பாளையம் அரண்மனை பட்டக்காரர் பாலசுப்பிரமணிய பெரியண்ண வேனாடார் தலைமை வகித்தார். காயத்ரி பரிவார் ஹரிதுவாரின் உத்தம் கெய்க்வாட், ஸ்ரீ செந்துார் மஹால் நிறுவனர் மாரப்பன் முன்னிலை வகித்தனர்.

அகில பாரத கோ சேவா சம்யோஜக் அஜித் பிரசாத் மகாபத்ரா, தேசிய சிந்தனை கழக தென் பாரத அமைப்பாளர் விஸ்வநாதன் சிறப்புரை ஆற்றினர். ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, மாவட்ட தலைவர் கார்மேகம், புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் கஸ்துாரிபிரியா உட்பட பலர் பங்கேற்றனர். சிவகார்த்திகேயன் நன்றியுரை கூறினார். முப்பெரும் விழா ஏற்பாடுகளை மாவட்ட கோ சேவா ப்ரமுக் வெங்கடாசலம், மோகன், சுபாஷ், அருண்குமார் செய்திருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement