வேளாண் கருவிகள் ஆய்வு விவசாயிகளுக்கு விளக்கம்
வெள்ளகோவில்:வெள்ளகோவில் வட்டாரத்தில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட, வேளாண்மை பண்ணை கருவிகள் ஆய்வு செய்யப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில், வேளாண்மைத்துறையின் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், பயறு வகை, தானியம், ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்கள், எண்ணெய் வித்துகள், மர எண்ணெய் வித்து பயிற்சி, பருத்தி மற்றும் வேளாண்மை இயந்திரமாக்குதல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தின் கீழ், டிராக்டரால் இயங்கக் கூடிய சுழல் கலப்பைகள், மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. வெள்ளகோவில் வட்டாரம், வீரசோழபுரம் கிராமத்தில், கண்ணம்மாள் என்பவருக்கு, மானிய விலையில், சுழல்கலப்பை வழங்கப்பட்டது. அதன் செயல்படுகளை தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன்.
வெள்ளகோவில் வட்டார வேளாண்மை அலுவலர் செல்வகுமார், துணை வேளாண்மை அலுவலர்கள் விசுவாநாதன், உதவி வேளாண்மை அலுவலர்கள் லோகநாதன், சுரேஷ்பாபு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பண்ணைக் கருவிகள் பயன்பாடு குறித்து விவசாயிகளிடம் விளக்கினர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!