பதவி உயர்வால் காலியிடங்கள்; அங்கன்வாடி பணி தடுமாற்றம்
அவிநாசி:அவிநாசி வட்டாரத்தில், 124 அங்கன்வாடிகள் உள்ளன. இதில், ஒருவர் மட்டுமே பணிபுரியக்கூடிய மினி அங்கன்வாடிகள், 27 உள்ளன.
சமீபத்தில், அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் உதவியாளர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணிமாறுதல் வழங்கப்பட்ட நிலையில், அவிநாசியில் இருந்து, ஏராளமானோர் பணியிட மாறுதல் பெற்று, திருப்பூர் நகர, ஊரகப்பகுதிகளுக்கு சென்றுவிட்டனர்.
சிலர் பணி ஓய்வும் பெற்றுவிட்டனர். இதனால், 43 அங்கன்வாடி பணியாளர் உள்ளிட்ட பிற பணியிடங்கள் என, 55 பணியிடம் காலியாக உள்ளது. ஒரு பணியாளர் விடுப்பு எடுத்தால், அருகேயுள்ள மையத்தில் பணிபுரிவோரை, மாற்றுப்பணியில் அங்கு பணியமர்த்த வேண்டியிருக்கிறது.
சிலர், முன்கூட்டியே தகவல் சொல்லாமல் விடுப்பு எடுக்கும் போது, அந்த மையங்களை திறப்பதில் தாமதம் கூட ஏற்படுகிறது.
அத்துடன், நிர்வாகப்பணிகளை கவனிக்க, 4 மேற்பார்வையாளர்கள் உள்ள நிலையில், அதில், 2 பேர், நிர்வாக ரீதியான பயிற்சிக்கு சென்று விட்டனர். ஒருவர் பணியிட மாற்றம் பெற்றுள்ள நிலையில், ஒரு மேற்பார்வையாளர் மட்டுமே, ஒட்டு மொத்த நிர்வாகப்பணிகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இதனால், 'அங்கன்வாடிகளின் நிர்வாக கட்டமைப்பு கூட 'ஆட்டம்' காண்கிறது' என்கின்றனர், பணியாளர்கள் சிலர்.
குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அதிகாரி கூறியதாவது: அவிநாசி வட்டாரத்தில் தான், அதிகளவு பணியாளர்கள் பணியிட மாற்றம் பெற்று, பிற இடங்களுக்கு சென்றுள்ளனர். 'காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும்' என, துறை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
விடுமுறையில் செல்லும் அங்கன்வாடி பணியாளர்கள், முன்கூட்டியே தகவல் சொல்ல வேண்டும். அவர்களுக்கு மாற்றாக செல்வோர், சரியான நேரத்துக்கு மையங்களுக்கு செல்ல வேண்டும் என, அறிவுரை வழங்கியுள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!